அண்மைய செய்திகள்

recent
-

உயிர் காக்க உதவுங்கள்

  (Blood cancer) அன்பான உறவுகளே என்போலவும் உங்களைப்போலவும் இவ்வுலகில் வாழத்துடிக்கும் ஒரு ஜீவனே சுகன்ஜா வயது 26. நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து கடந்த 3 வருடங்களாக இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு ஓரளவு உடல் நிலை தேறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவர்

 தற்போது மீண்டும் உடல் நிலை மோசமடைந்து காணப்படுகிறார்.


 நடுத்தர குடும்பங்களின் அன்றாட வாழ்வியல் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை யாவரும் அறிந்ததே. அவளின் மருத்துவச் செலவிற்காக தமது உடமைகள் அனைத்தையும் விற்றும் ஈடுவைத்தும் செலவளித்த அக்குடும்பம் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் அவளை காப்பாற்ற துடிக்கிறார்கள்.


 அவளுக்கு இந் நோயினை குணப்படுத்துவதற்கான மருந்துகள் வைத்திய சாலையில் இன்மையினால் விலைக்கு பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இக்குடும்பம் உள்ளது.


 பிள்ளையை காப்பாற்ற பெற்றோர் போராடுகிறார்கள் எது எவ்வாறாயினும் அவளது உயிர் காக்கப்பட வேண்டும். அவளும் இப் பூமியில் நம்மைப்போல வாழ வேண்டும். அத்திய அவசியமாக அவளுக்கு உடனடியாக மருந்து ஏற்றப்பட்ட வேண்டும். 


 போசாக்கான உணவு கிடைக்க வேண்டும். அன்பான எம் உறவுகளே, தனவந்தர்களே, புலம் பேர் உறவுகளே எம்மாலான உதவிகளை செய்து அவளின் உயிர் காக்க உதவுவோம். நாம் செய்யும் இக்காரியம் நம் தலைமுறையையே வாழவைக்கும். அவர்களுக்கு உதவும் உள்ளங்கொண்டவர்கள் இவ் வங்கி இலக்கத்திற்கு உங்களாலான பணத்தொகையை வழங்கி உதவிங்கள். அவர்களது தொலை பேசி இலக்கம் இணைக்கிறேன் நேரடியாக சென்றும் பார்வையிடலாம். 


உயிர் காக்க உதவுங்கள் Reviewed by Author on July 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.