அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நடை முறைப் படுத்தப் படுவதில்லை-சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரிஸ் .

 மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்ற போர்வையிலே அபிவிருத்தி குழுவின் தலைவர் தனது அரசியலை முன்னெடுத்து செல்வதற்காகவும் ,தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும்,இக்கூட்டத்தை நடத்துவதாக   சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரிஸ்   விசனம் தெரிவித்துள்ளார்.


-மன்னாரில் இன்று புதன்கிழமை(10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் என்கிற போர்வையில் அபிவிருத்திக் குழு கூட்டம் இடம்பெற்று வருகின்றது.வழமையாக இடம் பெற்று வரும் அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற எடுக்கப்படும் தீர்மானங்கள் எதுவும் நடை முறைப் படுத்தப் படுவதில்லை.


அரச திணைக்கள அதிகாரிகளை அழைத்து செலவீனங்களை வழங்கு கின்றார்களோ தவிர இங்கு எடுக்கப்படுகின்ற தீர்மாணங்கள் சேவைகள் எதுவும் மக்களை சென்றடைவது இல்லை.


மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் என்ற போர்வையிலே அபிவிருத்தி குழுவின் தலைவர் தனது அரசியலை முன்னெடுத்து செல்வதற்காகவும்,தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும்,இக்கூட்டத்தை நடத்துகின்றார்.


இக்கூட்டத்தை நடாத்துவதில் எவ்வித பலனும் இல்லை.


மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான மணல் மற்றும் கிரவல் போன்றவற்றை தனது ஆதரவாளர்களுக்கு அனுமதி யை வழங்கியுள்ளார்.


குறித்த விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.


மேலும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு அனைத்து திணைக் களங்களுக்கும் தனது சிபாரிசு கிடைத்தால் மட்டுமே மணல் மற்றும் கிரவல் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி வழங்க வேண்டும் கடுமையாக எச்சரித்துள்ளார்.


இவ்விடயத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்


.


மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நடை முறைப் படுத்தப் படுவதில்லை-சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரிஸ் . Reviewed by Author on July 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.