சிறப்பாக இடம் பெற்ற நானாட்டான் தூய. ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா
மன்னார் நானாட்டான் தூய. ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று புதன்கிழமை ( 10) காலை 7 மணிக்கு அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது .
திருநாள் திருப்பலியில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்றனர்.
நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை பெனோ அடிகளாரின் ஒழுங்கு படுத்தலில் ஏழு நாள் ஆயத்த வழிபாடுகளுடன் இன்றைய தினம் திருநாள் திருப்பலி வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம் பெற்ற நானாட்டான் தூய. ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா
Reviewed by Author
on
July 10, 2024
Rating:

No comments:
Post a Comment