அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கடல் பகுதியில் 50 கிலோவுக்கும் அதிகமான ஹஷீஷ் போதை பொருட்களுடன் இருவர் கடற்படையினரால் கைது

 மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால்  கையகப்படுத்தப்பட்ட  மீன்பிடி படகில்  ஹஷீஷ் போதை பொருள் இருந்து உறுதியாகியுள்ளது.


மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தாகச் சந்தேகிக்கப்படும்  மீன்பிடி  படகொன்றை கடற்படையினர் இன்று சனிக்கிழமை (14) கையகப்படுத்தி இருந்தனர்.


அத்துடன் அந்தப் படகில் இருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை  தெரிவித்தது.


குறித்த  படத்திலிருந்து போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப் பட்டிருந்தன.


 

இந்நிலையில் குறித்த படகில் 50 கிலோகிராம் விட அதிகமான ஹஷீஷ் போதை பொருள் உள்ளமை தெரிய வந்துள்ளது.


மேலும்இ இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் ஹஷீஷ் போதை பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.






மன்னார் கடல் பகுதியில் 50 கிலோவுக்கும் அதிகமான ஹஷீஷ் போதை பொருட்களுடன் இருவர் கடற்படையினரால் கைது Reviewed by Vijithan on February 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.