அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா

வவுனியா
இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள்.இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்ததில் மிகவும் வளர்சியுடைய நகரமாக அமைந்துள்ளது.

கல்வி
பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காக ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.
இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.

[பாடசாலைகள்
வவுனியா மகாவித்தியாலயம்
இறம்மைக்குளம் மகளிர் கல்லூரி
வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம்
[[வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்]]
வவுனியா விபுலாநந்தா கல்லூரி
சைவப்பிரகாச வித்தியாலயம்
வவுனியா இந்துக் கல்லூரி
வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை
வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகாவித்தியாலயம்
ஓமந்தை மத்திய கல்லூரி
வவுனியா சர்வதேசப் பாடசாலை

தொழில் நுட்பக் கல்லூரி
வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.

தனியார் கல்வி நிலையங்கள்
சண்முகா கணினி பயிற்சி நிலையம்

தொலைத் தொடர்பு
அஞ்சல்
வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.
அஞ்சற் குறியீடு: 43000

பத்திரிகைகள்/சஞ்சிகைகள்
நிலம் - கவி இதழ்
தேடல் - இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
பூங்கனி - மாதமொருமுறை

மத வழிபாட்டுத் தலங்கள்
வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

இந்து மதம்
சித்திவிநாயகர் ஆலயம்-குடியிருப்பு
அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில்-கோவில்குளம்
ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் - பூந்தோட்டம்
அருள்மிகு சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம்
காளிகோயில்-குருமன்காடு
ஸ்ரீ கந்தசாமி கோயில்
சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
சமளன்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளன்குளம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.

கிறீஸ்தவ மதம்
கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்குளம்

தொடருந்து
வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்தும் வவுனியாவிற்குமான சேவைகள் இடம் பெறுகின்றன. புகையிரதப் பயணச் சீட்டுக்களை வவுனியா புகையிரத நிலையத்தில் 7 நாட்கள் முன்னையதாகவே காலை 7 மணிமுதல் காலை 10 மணிவரை செய்துகொள்ளவியலும்.
கொழும்பு - வவுனியா (ரஜரட்ட ரெஜினா) - கொழும்பிலிருந்து மாலை 1:45
கொழும்பு - வவுனியா (கடுகதி) - கொழும்பிலிருந்து மாலை 4:20
கொழும்பு - வவுனியா (யாழ்தேவி) - கொழும்பிலிருந்து இரவு 10:00
பேருந்து
வவுனியாவிலிருத்தும் வவுனியாவிற்கும் தனியார் மற்றும் அரசாங்க பேருந்து சேவைகள் இடம் பெறுகின்றன.வவுனியாவிலிருந்து கொழும்பிற்கோ அல்லது கொழும்பிலிருந்து வவுனியாவிற்கோ இரவில் பயணம் செல்லும் பயணிகள் புத்தளமூடான பாதையில் வழிப்பறிக்கொள்ளைகள் நடைபெறுவதால் இப்பாதையூடான பயணத்தைத் தவிர்த்தல் நல்லது. தவிர அதிகரித்துவரும் சோதனை நடைமுறைகளால் பெரும்பாலானவர்கள் தொடருந்தில் பயணிப்பதையே விரும்புகின்றார்கள்.
வவுனியா - மன்னார்
வவுனியா - திருகோணமலை
வவுனியா - மட்டக்களப்பு
வவுனியா - அனுராதபுரம்
வவுனியா - கொழும்பு (குருநாகல் மற்றும் புத்தளம் ஊடாக இருவேறு வழிகள்)
வவுனியா Reviewed by NEWMANNAR on September 15, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.