மன்னாரில் நல்லினக்க ஆனைக்குழுவின் விசாரனை இடம்பெற்றால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரும்.
மன்னார் மாவட்டத்தில் கானாமல் போனவர்களின் நிலை என்ன? என்பதினை சர்வதேசச் சமோகம் கண்டறியப்பட வேண்டிய ஒரு கடப்பாடு.
இவர்கள் நிலைமைதொடர்பாக உறவுகள் அரசுக்கு பலதடவைகள் பல வழிகளில் எடுத்தக்காட்டியும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை. கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிவரை மன்னார் மாவட்டத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் கானாமலும் கடத்தவும்பட்டுள்ளனர்
இவர்களில் சிலர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். எனினும் பலரது நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இவர்கள் எங்கு இருக்கிரார்கள் ஏன் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது கூட எவருக்கும் தெரியாதத நிலையில் உள்ளது.
கடத்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு சட்ட்த்தின் பிரகாரம் தன்டனை வழங்கப்பட வேண்டும். இவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று தெரியாமல் அலையும் காணாமல் போனவர்களின் தாய்,தந்தை மனைவி , தினம் தினம் கண்ணீர் விட்டுக்கொண்டுருக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் என்ன? இவர்களை தேடித் தேடி உறவுகள் தமது வாழ்நாளை கழித்துவருகின்றனர். இவர்கள் கடத்தி வைக்கப்பட்டது எதட்காக? கடத்தியவர்கள் நல்லென்ணத்துடன் இவர்களை மீண்டும் சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். வருடக்கணக்கில் தமது உறவுகளைப் பார்காமல் துடித்துகொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும்.
இவைகள் எல்லாம் நடைபெற மன்னார் மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் தன்னார்வத்தொண்டு அமைப்புக்கள் கவனம் செலுத்தி நல்லெனக்க ஆனைக்குழுவின் பிரசன்னத்தை மன்னாரில் ஏற்படுத்தும் வகையில் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்ற தீர்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்
மன்னாரில் நல்லினக்க ஆனைக்குழுவின் விசாரனை இடம்பெற்றால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரும்.
Reviewed by NEWMANNAR
on
January 30, 2010
Rating:
No comments:
Post a Comment