மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டடு உதவி வழங்கினார் வன்னி எம்.பி வினோ
மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமத்தில் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் தற்போதுவரை 44 குடும்பங்களைச்சேர்ந்த 130 பேர்வரை பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்நிலையில் பாடசாலையிலும் ஆலையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக தென்பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மழை நீர் ஆறுகளினுடாக பெருக்கெடுத்து அறுவியாற்றில் கலந்து தாழ்வான இடங்களை நோக்கி ஊடறுத்துச்செல்கின்றது.
இந்த நிலையில் தம்பனைக்குளம் கிராமத்திலும் வெள்ள நீர் உற்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுள் 15 குடும்பங்களைச்சேர்ந்த 48 பேர் ஆலையத்திலும், ஏனைய 29 குடும்பங்களைச்சேர்ந்த 82 பேர் அருகில் உள்ள சிறுவர் பாடசாலையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்களை பார்வையிடச்சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காண பால்மா வகைகளை வழங்குவதற்காண ஏற்பாடுகளை மேற்கொண்டுளளதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள செட்டிக்குளம் மெனிக்பாம் வலையம்1,வலையம்2,வலையம்3,வலையம்4 ஆகிய கிராம மக்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் இன்று (04-02-11) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
செட்டிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த சுமார் 800 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 4000 பேர் வரை பாதிப்படைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இடம்பெயர்ந்த நிலையில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் நலன் கருதி ஒரு தொகுதி பால் மா பக்கற்றுக்கள்,பிஸ்கட் வகைகள் மற்று சமையல் பொருட்கள் ஆகியவற்றை பாராளுமன்ற உருப்பினர் வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)

Reviewed by NEWMANNAR
on
February 05, 2011
Rating:
No comments:
Post a Comment