மன்னாரில் அம்புலன்ஸ் சேவை
மன்னார் மாவட் டத்திற்கான அவசர அம்புலன்ஸ் சேவை ஆரம் பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மக்கள் அவசர தேவைகளுக்காக அம்புலன்ஸ் சேவையை நாடுவதற்காக 110 மற்றும் 0242222001 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அவசர தேவைக்கான அம்புலன்ஸ் சேவையின் ஆரம்ப வைபவம் நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அவசர தேவைகளில் ஈடுபடவுள்ள 15 அம்புலன்ஸ் வண்டி களுக்கான 2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி மற்றும் எம்.ரி.ஐ. (ணிஹியி)நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெப் பேன்ஹவ்ட் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தார்கள்.
மன்னாரில் அம்புலன்ஸ் சேவை
Reviewed by NEWMANNAR
on
May 01, 2011
Rating:

No comments:
Post a Comment