அண்மைய செய்திகள்

recent
-

சிறு நாவற்குளம் கிராம மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் உள்ள சிறு நாவற்குளம் கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது குறித்த கிராமத்தில் மீண்டும் மீள் குடியமர்ந்தப்பட்;ட போதும் அம் மக்கள் தொடர்ந்தும்
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.




இது தொடர்பாக குறித்த கிராம்தினைச் சேர்ந்த பெரிய சாமி(வயது-60) எனும் வயோதிபர்  கருத்துத்தெரிவிக்கையில்,



1990 ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இக்கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் நாட்டின் ஏணைய பிரதேசங்களிலும் வாழ்ந்து வந்தனர்.



பின்னர் இந்தியா சென்ற மக்கள் மீண்டும் 2004 ஆம் ஆண்டு நாடு திரும்பினர்.



இந்த நிலையில் குறித்த சிறு நாவற்குளம் கிராமம் இராணுவ பாதுகாப்பு வளையமாக காணப்பட்டதன் காரணத்தினால் குறித்த கிராம மக்களை மீண்டும் அந்த மண்ணிலேயே குடியமர்வதற்காண அணுமதி வழங்கப்பட்டது.



இந்த நிலையில் 33 குடும்பங்களினைச் சேர்ந்த 165 பேர் கடந்த வருடம் யுன் மாதம் மீண்டும் சிறுநாவற்குளம் கிராமத்தில் குடியமர்ந்தனர்.



தமது வீடுகள் இருந்த இடமே தெரியாதவாறு தரை மட்டமான நிலையில் அடர்ந்த காடுகளின் மத்தியில் குடியமர்ந்தோம். பின் காடுகளை துப்பரவாக்கி ஓலை குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்தோம்.



தற்போது இம் மக்கள் குடியமர்ந்து ஒரு வருடங்களை கடந்துள்ள போதும் இவர்களுக்காண வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என அக்கிராமத்தினைச் சேர்ந்த வயோதிபரான பெரிய சாமி தெரிவித்தார்.



எவ்வித அடிப்படை வசதியும் அரசாங்கத்தினால் செய்து தரப்படாத நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் எமது காணிகளை சுபீகரிக்கும் நோக்குடன் அதிகாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.



மேலும் எமது கிராமத்தினைச்சேர்ந்த 30 குடும்பங்கள் வரை வர உள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்தன்.



ஒரு வருடங்களுக்கு முன் குடியமர்ந்த இக்கிராம மக்களுக்கு அரசாங்கத்தினால் எவ்வித மீள்குடியேற்ற உதவிகளும் செய்யப்படவில்லை.



ஆனால் மடு சந்தியில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேராமல் சுமார் 8 இலட்சம் ரூபாய் பெருமதியான நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சிறு நாவற்குளம் கிராம மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி Reviewed by NEWMANNAR on July 14, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.