மடுமாதா வருடாந்த திருவிழா நாளை
மன்னார் மடுத் திருத்தலத்தில் மருதமடு நாயகியின் வருடாந்த திருவிழா நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடப் படவுள்ளது.
இம்முறை திருவிழாவில் நாடளாவிய ரீதியிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்துகொள்ள வுள்ளதுடன் அவர்களுக்கான சகல வசதிகளையும் மாவட்டச் செயலகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக மறை மாவட்ட குரு முதல்வர் அதிவண.
விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.
மடுத்திருத்தலத் திருவிழா கடந்த ஜூன் 23ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து தினமும் மாலை நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றன. இன்று மாலை வெஸ்பர்ஸ் ஆராதனை நடைபெறுவதுடன் நாளை காலை திரு விழா திருப்பலியும் அதனையடுத்து மடு மாதாவின் திருச்சொரூப பவனியும் இடம்பெறவுள்ளன.
இம்முறை திருவிழா வில் சிறப்பதிகளாக சிலாபம் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு. வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை மற்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை ஆகியோர் கலந்துகொள்ள வுள்ளனர். திருவிழாத் திருப்பலியினை மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையுடன் இணைந்து சிலாபம், யாழ். மறைமாவட்ட ஆயர்கள் நிறைவேற்றவுள்ளனர் என குருமுதல்வர் அதிவண. விக்டர் சோசை தெரிவித்தார்.
மடுமாதா வருடாந்த திருவிழா நாளை
Reviewed by NEWMANNAR
on
July 01, 2011
Rating:

No comments:
Post a Comment