மன்னாரில் மீண்டும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்! கிராம அலுவலர் பிரிவையும் ஏற்படுத்த முயற்சி
முன்னர் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான களிமண் அகழப்பட்ட பகுதியிலேயே இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் ஓலைகளால் குடிசைகளை அமைத்து நிரந்தரமாகத் தங்கும் சூழலை ஏற்படுத்தி வருகின்றனர்
.
யுத்தத்திற்கு முன்னர் தாம் வாழ்ந்ததாக அம்மக்கள் கூறுகின்ற போதிலும் அங்கு முன்னர் சிங்கள மக்கள் இருக்கவில்லை என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இப் பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்திருநததுடன் அவர்களே சிங்களக் குடும்பங்கள் குடியேற உதவுவதாகவும் கூறினர்.
இதேபோனறு மடுச் சந்தியில் யுத்தத்திற்கு முன்னர் பத்து தொடக்கம் பதினைந்து வரையிலான குடும்பங்கள் இருந்தன. ஆனால் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதியின் இரு மருங்கிலும் கொட்டில்கள், கடைகள் அமைத்திருக்கின்றார்கள்.
இந்தக் குடும்பங்கள் இருக்கும் பிரதேசத்திற்கு ஒரு தனியான சிங்கள கிராம அலுவலர் பிரிவு ஒன்றையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே மரம் ஒன்றின் கீழ் இருந்த புத்தர் சிலையுடன் கூடிய சிறு கூடம் வளர்ந்து பெரும் பௌத்த விகாரையுடன் கூடிய பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான பாடசாலையை சிறிலங்காக் கடற்படை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது.
இதேவேளை இந்த வீதியின் வடக்குப் புறத்தில் புகையிரத வீதிக்கு அப்பால் இம் மக்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர கல் வீடுகள் அவசரம் அவசரமாக கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் முன்பு காடாக இருந்த இப்பகுதியை துப்பரவு செய்து அவசர அவசரமாக வீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
மன்னாரில் மீண்டும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்! கிராம அலுவலர் பிரிவையும் ஏற்படுத்த முயற்சி
Reviewed by NEWMANNAR
on
July 09, 2011
Rating:
No comments:
Post a Comment