சிறப்பு செய்தி பார்வை- மன்னாரில் பெண்கள் யுவதிகள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் அதிகரிப்பு-
தரித்தல் ,சட்டவிரோத கருக்கலைப்பு ,காதல் தோல்வியால் தற்கொலை போன்ற பிரச்சினைகளும் வளர்ந்து கொண்டு போவதாகவும் இச் சமுக சீர்கேடுவருங்கால சந்ததியிலும் செல்வாக்குசெலுத்தும் எனவும் இதனை எவ்வகையிலேனும் தடை செய்வதற்கோ அல்லது தடுத்து நிறுத்துவதற்கோ நடவடிக்கை எடுக்கும்படி சமுக ஆர்வலர்களும் சமுக நிறுவனங்களும் மக்களிடையே வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே விடுமுறை தினங்களிலும் மாலை வேலைகளிலும் சன நடமாட்டமற்ற அல்லது மறைவான இடங்களிற்கு இளைஞர்களுடன் சென்று வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது .இதில் மன்னார் -நகரம் தவிர்ந்த வேறு பிரதேசத்தில் இருந்து வந்து மன்னாரில் கல்வி கற்கும் மாணவிகளே அதிகளவில் ஈடுபடுவதாக மன்னார் இணையத்தளத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாடசாலை மாணவிகள் விடுமுறை மற்றும் மாலை நேரங்களில் தனியார் வகுப்புகளிற்கு செல்வதாக பெற்றோரிடம்
கூறிவிட்டு இளைஞகளிடம் தொலை பேசி முலம் தொடர்பு கொண்டு மறைவான இடங்களிற்கு சென்று காதல் எனும் பெயரில் ஏமாந்து கொண்டு வருகின்றனர்
இம் மாணவிகளையோ அல்லது யுவதிகளையோ அவ் இடங்களிற்கு கொண்டுவந்து விடுவதற்கு ஆட்டோ சாரதிகளும் உதவி புரிகின்றனர் .
தலை நகரில் இவ்வாறான செயல்கள் நடை பெற்ற போதும்அங்குள்ள போலீசார் அவர்களையும் ,அவர்களுக்கு உதவியவர்களையும் ,கைது செய்வதுடன் அவர்களது பெற்றோரை அழைத்து அறிவுரை சொல்லி அனுப்புகின்றனர் ஆயினும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிசார் இதை கண்டும் காணதது போல் உள்ளனர் .
பெற்றோரின் கண்களை கட்டிவிட்டு செல்லும் இவ்வாறானவர்கள் பின்னால் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினை பற்றி அறிவது இல்லை ,
மேலும் அறியவருவதாவது சில மாணவர்களும்,யுவதிகளும் ஆட்டோ சரதிகளுடனும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாககூறப்படுகின்றது .இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்கள் புகைப்படம் ,மற்றும் வீடியோ எடுப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலைகள் பெற்றோருக்கு தெரியாமலேயே தொடர்ந்தவண்ணம் உள்ளன.பெற்றோர்களே இனியாவது உங்கள் பிள்ளைகளின் நலத்தில் அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்படுங்கள்.
,மன்னார் கச்சேரியில் அண்மையில் இடம் பெற்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரின் தலைமையிலான கலந்துரையாடலிலும் மன்னாரில் சிறுவர் சிறுமியர் பாலியில் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறான குற்ற செயல்கள் மன்னார் பாலத்தடி ,கீரி கடற்கரை ,காட்டுப்பள்ளி ,காட்டுசூழல்கள் போன்ற இடங்களில் குற்றங்களில் ஈடு படுகின்றனர்.
மேலும் இவ்வாறன குற்ற செயல்கள் இடுபாடும் மற்றும் மன்னாரிலும் சமூக சீர்கேட்டுக்கு உடந்தைய இருக்கும் சில ஆட்டோ சாரதிகளின் விபரமும் மற்றும் துணைபோகும் நபர்களின் விபரமும் தொடருமிடத்தில் புகைப்படத்துடன் கூடிய ஆதரங்களுடன் செய்துகள் வெளியாகும் என தெரிவிக்கின்றோம்.
இளைய சமுதாயமே எமது கலை கலாசரத்தை மட்டும் அல்ல இளம் சமுதாயத்தையம் அழிக்க நிணைக்கும் சக்திகளுக்க எதிராக குரல் கொடுக்க தயங்க வேண்டாம்..
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்."
(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)
ஆசிரியர்
மன்னார் இணையம் .
Newmannar.com
இணைப்பு -
ஒழுக்கம் அவசியமா?
சிறப்பு செய்தி பார்வை- மன்னாரில் பெண்கள் யுவதிகள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் அதிகரிப்பு-
Reviewed by NEWMANNAR
on
August 08, 2011
Rating:
No comments:
Post a Comment