விசித்திரமான மன்னார் சந்தை,,,,
மன்னாரில் தற்போது 152,000 மக்கள் வாழ்கின்றனர். இங்கு நெல்லை தவிர ஏனைய எல்லா விவசாய உற்பத்திகளிற்கும் அதிகளவு பற்றாக் குறை நிலவுகின்றது. எனினும் அரிசியை கூட உயர்ந்த விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலையினை தற்போது உள்ள சந்தை பொறி முறை உருவாக்கியுள்ளது. இதனால் தற்போது காணப்படும் சந்தைப் பொறி முறை தமக்குப் பொருத்தமானது இல்லை என மன்னார் வாசிகள்தெரிவிக்கின்றனர்.
மன்னார் மரக்கறிகள் தம்புள்ள மற்றும் வவுனிய சந்தைகளிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, மீண்டும் மன்னார் சந்தைகளிற்கு தம்புள்ள மற்றும் வவுனியா தரகர்களினால் உயர்ந்த விலையுடன் கொண்டு வரப்படுகின்றன. இதே போல, மன்னாரில் சுமார் 40 சதவீதம் அளவு மிகையாக நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற போதும், அரிசியை உயர்ந்த விலையில் வவுனியாவில் இருந்து இறக்குமதி செய்வதாக மன்னார் வியாபாரிகள்தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, மன்னார் மாவட்ட செயலகத்தினால் நிவாரண அரிசி வழங்ககுவதற்கான கேள்விப் பத்திரம் கோரும் போது, இதற்கு பொருத்தமானவர்கள் வவுனியாவில் இருந்தே தெரிவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக ஓய்வு பெற்ற திட்டமிடல் பணிப்பாளர் ஒருவர் ஒன்லைன் தெரிவித்தார்.
இவ்வாறு விசித்திரமான சந்தைப் பொறி முறை மன்னாரில் நிலவுவதற்கு, தங்கு தடையின்றி தம்புள்ள, வவுனியா மரக்கறிகள் வந்து குவிவதும், எல்லா வகையான மரக்கறி மற்றும் பழங்களும் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து தொடர்ச்சியாக பெற முடியாமையினால் உயர்ந்த விலைக்கேனும் தம்புள்ள போன்ற பிற மாவட்ட சந்தை தரகர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதாக மன்னார் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமது மரக்கறிகளை கொள்வனவு செய்ய மன்னார் வியாபாரிகள் தயங்குவதால், வீட்டு வசலுக்கே வந்து எடுத்துச் செல்லும் தம்புள்ள மற்றும் வவுனியா போன்ற சந்தை தரகர்களிற்கு குறைந்த விலைக்கேனும் விற்க வேண்டி உள்ளதுடன் இதனால் மரக்கறி செய்கையில் ஊக்கம் இழந்து வருவதாக மன்னார் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மன்னாரில் தேவையான அளவு அரிசி ஆலைகள் இல்லாமையால், சுமார் 70 சதவீதமான நெல் வவுனியா அரிசி ஆலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, உயர்ந்த விலையுடன் அரிசியாக மன்னாருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(என்.சிவரூபன்)
இதேவேளை, மன்னாரில் தேவையான அளவு அரிசி ஆலைகள் இல்லாமையால், சுமார் 70 சதவீதமான நெல் வவுனியா அரிசி ஆலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, உயர்ந்த விலையுடன் அரிசியாக மன்னாருக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(என்.சிவரூபன்)
விசித்திரமான மன்னார் சந்தை,,,,
Reviewed by NEWMANNAR
on
August 13, 2011
Rating:

No comments:
Post a Comment