மன்னாரிலும் கிறீஸ் மனிதன்: கட்டுக்கதையால், பதற்றத்தில் மக்கள்!
நாட்டின் பல பாகங்களிலும் மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கிறீஸ் மனிதன் என கூறப்படுவோரின் செயல்பாடுகள் மன்னார் மாவட்டத்திலிலும் இடம் பெற்று வருவதாக மன்னார் மாவட்டத்தின் சகல கிராமங்களிலும் வதந்தி பரவியுள்ளமையினால் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதோடு மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மதியம் முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள உப்புக்குளம், பள்ளிமுனை, தாராபுரம், பேசாலை மற்றும் எருக்கலம் பிட்டி ஆகிய கிராமங்களில் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் பல பெண்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பெண்ணின் மார்பை கிறீஸ் மனிதர்கள் வெட்டியுள்ளதாகவும் பல்வேறுபட்ட வதந்திகள் மன்னார் மாவட்டத்தில் பரவியுள்ளது.
இதனால் மன்னார் மக்கள் நேரத்திற்கே தமது இருப்பிடங்களை நோக்கி சென்றுள்ளனர். குறிப்பாக இக்கதை பரவியதினைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் மேற்படி சம்பவம் இடம் பெற்று வருகின்ற நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பாக மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடித்திரிபவர்களை மன்னாரில் உள்ள இளைஞர் குழுக்கள் கண்கானித்த வருகின்றனர்.
மன்னார் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பகல், இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டு வருகின்றமை வழமை. இந்த நிலையில் கிறீஸ் மனிதனின் நடமாட்டம் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் இரவு நேரத்தில் மின் தடை செய்யப்படுகின்றமை மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கிறீஸ் மனிதனின் நடமாட்டம் மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அடுத்து மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் பொலிஸ் அதிகாரிகளோ அல்லது திணைக்களத் தலைவர்களோ இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு எந்த விதத் தகவல்களினையும் வழங்கவில்லை என மக்கள் தெரிவிககின்றனர்
மன்னாரிலும் கிறீஸ் மனிதன்: கட்டுக்கதையால், பதற்றத்தில் மக்கள்!
Reviewed by NEWMANNAR
on
August 14, 2011
Rating:

No comments:
Post a Comment