பேசாலை பகுதியில் மர்ம மனிதர்களின் பீதி
மன்னார் பேசாலை பகுதியிலும் மர்ம மனிதர்களின் ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று சந்தேக நபர்கள் இருவர் பற்றைக் காடுகளுக்குள் ஒளிந்ததை தொடர்ந்தே இச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.30 மணியளவில பேசாலை காட்டாஸ்பத்திரி கிராமத்தில் சந்தேகத்துக்கிடமான இருவர் வீடொன்றுக்குள் புகுந்து வாசலில் ஒளிந்திருந்ததாகவும் இதனை கண்ட பெண்மணி கூக்குரலிடவே இருவரும் தப்பியோடி அருகிலுள்ள பற்றைக்காட்டுக்குள் ஒளிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பொது மக்கள் ஒன்றுகூடி சந்தேகத்துக்குரிய இருவரும் ஓடி ஒளிந்ததாக கூறப்படும் பற்றைக்காட்டுக்கு தீ வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும் இந்த மர்ம மனிதர்களின் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என மாவை அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
பேசாலை பகுதியில் மர்ம மனிதர்களின் பீதி
Reviewed by NEWMANNAR
on
August 15, 2011
Rating:

No comments:
Post a Comment