அண்மைய செய்திகள்

recent
-

மர்மமனிதன் பிரச்சினைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-மன்னார் ஆயர் வலியுறுத்து

அவசரகாலச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படட அழுத்தங்களையும் விட மோசமான வகையில் அரசாங்கம் அம்மக்களிடம் நடந்து கொள்கிறது. அதற்காகவே கிறிஸ்பூதம் என்பதை உருவாக்கி தமிழ்மக்களை தொடர்ந்தும் கஷ்டங்களுக்குள் சிக்கவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார். நாட்டுக்குள் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் அரசாங்கம் அதற் காக பாதுகாப்புத் தரப்பினரையே பயன்படுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சத்துக்குள் தள்ளப்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்தக் கிறிஸ் மனிதர் பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் மெளனம் சாதிப்பது சந்தேகத்துக்கு வழி வகுக்கிறது. இந்தப்பிரச்சினை மிகவும் சிறிய விடயமா கும். இதற்குத் தீர்வு காண அரசால் முடியும். அதற்கு அரசாங்கத்துக்கு வெகுநேரம் ஆகப் போவதில்லை. ஆனால் அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதில் தள்ளியே நிற்கிறது. இதன்மூலம் தனக்கும் கிறிஸ்மனிதன் பிரச்சினைக்கும் தொடர்பு உள்ளது என்பதை அரசாங்கம் நிரூபித்து வருகின்றது. அவ்வாறு தொடர்பு இல்லை என்றால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி இதற்குத் தீர்வு காண அரசாங்கம் முயற்சித்திருக்கும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்தச் சிறிய பிரச்சினையிலிருந்து பாரியதொரு நடவடிக்கையை நோக்கிப் பயணிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதற்காகவே பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி கிறிஸ் மனிதர்கள் என மக்களால் பிடிக்கப்படும் பாதுகாப்புத் தரப்பினரையும் காப்பாற்றி வருகின்றது. இந்தப் பிரச்சினைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அவர்களை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்கவேண்டும். இதனை நீடிக்க விடாது மக்களின் பாதுகாப்பையும் நிம்மதியான வாழ்க்கையையும் நிலைநாட்டவேண்டும். அதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மர்மமனிதன் பிரச்சினைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-மன்னார் ஆயர் வலியுறுத்து Reviewed by NEWMANNAR on September 12, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.