அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புதுக்குடியிருப்புக் கடற்கரையோரத்தில் நேற்றுக் காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்புக் கடற்கரையோரத்தில் நேற்றுக் காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்புக் கடற்கரையோரத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக தலை மன்னார் பொலிசாருக்கு தகவல்

கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டனர். பின் குறித்த இடத்திற்குச் சென்ற மன்னார் நீதவான் கே.ஜீவராணி மரண விசாரணையை மேற்கொண்டார்.

இதன் போது இறந்தவர் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த முகமது சுல்தான் (63) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வழமையாக இக் கடற்கரைப் பகுதிக்கு மீன் வியாபார நோக்கமாக வந்து செல்வதாகவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை (09.10.2011) வழமை போன்று காலை 6 மணிக்கு இப்பகுதிக்கு வியாபார நோக்கத்திற்கு வந்த போது இவர் சுகவீனமுற்ற நிலையில் இறந்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரண விசாரணை மேற்கொண்ட நீதிபதி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்படியும் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படியும், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் படியும் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையின் பின் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 _
மன்னார் புதுக்குடியிருப்புக் கடற்கரையோரத்தில் நேற்றுக் காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Reviewed by NEWMANNAR on October 11, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.