மன்னார் பொது வைத்தியசாலை ஊழியர்கள் திடீர் பணிப் பகிஷ்கரிப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவையின் சிறு பணியாளர்கள் தமக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தினுள் 31/10/2011 அன்று அடையாள பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
குறித்த பணிப் பகிஸ்கரிப்பு பகல் ஒரு மணிவரை இடம்பெற்றது. மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்ற சுகாதார சேவையின் சிறு பணியாளர்கள் சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் இவ் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இவ் பணிப்பகிஸ்கரிப்பின் போது பணியாளர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு தமது பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
மன்னார் பொது வைத்தியசாலை ஊழியர்கள் திடீர் பணிப் பகிஷ்கரிப்பு
Reviewed by NEWMANNAR
on
November 02, 2011
Rating:

1 comment:
First do your duties well , then ask more salary .
nonsense
Post a Comment