திருமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பிற்கு வன்னி எம்.பி செல்வம்,வினோ கண்டனம்

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்து தனது வாழ்நாளை தமிழுக்காக அர்ப்பணித்து மரணமான தந்தை செல்வாவிற்கு திருமலையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சிலையை இனம் தெரியாத விசமிகள் சேதப்படுத்தி அதனை நாசப்படுத்தியமை தமிழ் பேசும் மக்களின் மனதைக் காயப்படுத்தும் செயல் எனவும் இந்த நாசகாரிய செயலில் ஈடுபட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
கடந்த காலங்களில் அதுவும் யுத்த காலங்களில் எவ்விதத்தாலும் பாதிக்கப்படாமல் இருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை யுத்தம் முடிவடைந்து சமாதனம் எற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் உடைக்கப்பட்டுள்ளமை எம்மை வேதனையடையச் செய்துள்ளது.
மக்களின் கண்காணிப்பு உள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இச்சிலை உடைக்கப்பட்டமை நீண்டநாள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள செயலாகவே காணப்படுகின்றது.
தந்தை செல்வாவின் சிலையை உடைத்தவர்கள் தாம் உடைத்து விட்டோம் என சந்தோசப்பட முடியும்.
ஆனால் தந்தை செல்வா ஒவ்வெரு தமிழ் பேசுகின்ற உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதனையும் உள்ளங்களில் உள்ள தந்தை செல்வாவை எவராலும் உடைத்து சேதப்படுத்த முடியாது.
அரசாங்கத்தின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள குறித்த நகரில் இடம் பெற்றுள்ள இச்சம்பவம் அனைவரையும் சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.
தந்தை செல்வா தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவராவர்.
எனவே தந்தை செல்வாவின் சிலையை உடைத்து நாசப்படுத்தியவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பிர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பிற்கு வன்னி எம்.பி செல்வம்,வினோ கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
November 01, 2011
Rating:

No comments:
Post a Comment