மன்னார் மாவட்டத்தில் கோரிக்கைப் படிவத்தின் மூலம் தமிழர் மீளப் பதிவு செய்யாத நிலை _
மன்னார் மாவட்டத்தில் கடந்தாண்டு 40 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட போதிலும் 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் கோரிக்கைப் படிவத்தின் மூலம் தமது பெயர்களை மீளப் பதிவு செயதுள்ளார்கள்.
மேற்கண்ட தகவலை முன்னாள் வன்னி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரும் தற்போதைய கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருமான க.கருணாநிதி தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்வதில் அந்த மாவட்டத்தின் அமைச்சர் ஒருவர் முழு மூச்சாக செயல்பட்டதுடன் உரியவர்களை கோரிக்கைப் படிவத்தின் மூலம் தமது பெயர்களைப் பதிவு செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
30 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களினதும் 10 ஆயிரம் தமிழ் வாக்காளர்களினதும் பெயர்கள் கடந்தாண்டு நீக்கப்பட்டன. இந்நிலையில் உரிமைக்கோரிக்கை படிவம் நிரப்பும் காலத்தில் 25 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் வாக்காளர்களின் பெயர்கள் 10 ஆயிரம் நீக்கப்பட்ட போதிலும் ஒரு தமிழர் கூட கோரிக்கைப் படிவத்தின் மூலம் தமது பெயர்களை மீளப் பதிவு செய்யாத நிலைமையே காணப்படுகின்றது.
வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும் என்பதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அக்கறை காட்டாத தன்மையும் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ___

Reviewed by NEWMANNAR
on
November 20, 2011
Rating:

No comments:
Post a Comment