அண்மைய செய்திகள்

recent
-

துப்பாக்கி ரவைகள், ஷெல் துகள்களை உடலில் தாங்கியுள்ள வன்னி மாணவர்கள் _

யுத்தகாலத்தின் போது தாக்குதல்களுக்கு இலக்கான வன்னி மாணவர்களில் பலர் இன்று வரையில் துப்பாக்கி ரவைகளும் ஷெல் துகள்களும் உடலில் பொதிந்தவர்களாக அவதியுற்று வருகின்றனர். எனினும் இந்த மாணவர்கள் தொடர்பிலான தகவல்கள் அரச அதிகாரிகளால் வெளிப்படுத்தப் படாதிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சிவசக்தி ஆனந்தன் நேற்று சபையில் விசனம் தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிவசக்தி ஆனந்தன் எம்.பி இங்கு மேலும் கூறுகையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வன்னி மாணவர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகினர் இவர்களில் பலர் இன்னும் துப்பாக்கி ரவைகள், ஷெல் துகள்கள் உடலில் பாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

இது அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்துள்ளது. சரியான முறையில் அவர்கள் இயங்க முடியாது அவதியுற்று வருகின்றனர் எனக் கூறினார்.

இதன் போது குறுக்கிட்ட பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க கூறுகையில் குறித்த மாணவர்களது விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இதனையடுத்து தொடர்ந்தும் உரையாற்றிய சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கூறுகையில் விபரங்கள் திரட்டப்படுவதில் தான் சிக்கல்கள் காணப்படுகின்றன. அரச அதிபர் பிரதேச செயலாளர்கள் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகளிடம் இது குறித்து தகவல்கள் கோரப்படும் பட்சத்தில் அந்தத் தகவல்களைத் தருவதற்கு உரிய அரச அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

இவ் விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்ததாலோ இல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டு விட்டாலோ குறித்த அதிகாரிகள் அமைச்சினாலோ இல்லா விட்டால் தமது மேலதிகாரிகளினாலே பழிவாங்கப்படலாம் என அஞ்சுகின்றனர்.

நாம் கிராமங்களுக்குச் சென்று குறித்த மாணவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டினால் அங்குள்ள மாதர் சங்க உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் இராணுவத்தினராலும் புலனாய்வுத் துறையினராலும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும் நிலைமையும் காணப்படுகின்றது.

அரச தரப்பினர் சென்று தகவல் திரட்டினால் அதனைப் பெறக்கூடியதாக இருக்கும். நாம் கூறுவது என்னவெனில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களது உடலிலுள்ள துப்பாக்கி ரவைகள் மற்றும் ஷெல் துகள்கள் ஆகியவை நீக்கப்படடு அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஆகும் என்றார். ___
துப்பாக்கி ரவைகள், ஷெல் துகள்களை உடலில் தாங்கியுள்ள வன்னி மாணவர்கள் _ Reviewed by Admin on November 26, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.