ஒற்றுமை என்பது இருந்தால் எங்களுடைய இனத்தின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற சக்தியாக நாங்கள் நிச்சயமாக மாறலாம் - மாவீரர் தினம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன்
எங்களுடைய இனம் எங்களுடைய அடுத்த சந்ததி நல்லமுறையிலே சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும். என்று கருத்தில் கொண்டு தங்களுடைய சுயநலங்களை மனதில் கொள்ளாது எங்களுடைய மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த மகான்களை நினைவு கூருகின்ற போது மனது நெகிழ்கின்றதென்கிறார் மாவீரர்
தினம் தொடா்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்
மாவீரர் துயிலும் இல்லங்கள் இன்றைக்கு அழிக்கப்பட்ட நிலையிலே அவர்களுடைய வாழ்விடங்கள் இல்லாதிருக்கின்ற நிலையிலே அவர்களுடைய அந்த புனித பூமிகள் மறுக்கப்பட்ட நிலையே இலங்கையில் இருக்கின்றதெனகிறார் செல்வம் அடைக்கலநாதன்
இந்த சூழலில் தமிழ் மக்களிடையே ஒற்றுமை என்பது இருந்தால் உண்மையிலே எங்களுடைய இனத்தின் விடுதலையை எங்களுடைய இனத்தின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற சக்தியாக நாங்கள் நிச்சயமாக மாறலாம் என செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களால் முடியாது என்ற ஒன்று இல்லை. நாங்கள் ஒற்றுமைப்பட்டால் ஒரு கரம் கோர்த்ததால் வெற்றி நிச்சம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் வலுவான ஒற்றமையை நாங்கள் பேண வேண்டும் மாவீரா்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால், அவர்களுடைய லட்சியம் நிறைவேறவேண்டுமாக இருந்தால் ஒற்றுமையை நாங்கள் பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை என்பது இருந்தால் எங்களுடைய இனத்தின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற சக்தியாக நாங்கள் நிச்சயமாக மாறலாம் - மாவீரர் தினம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன்
Reviewed by Admin
on
November 27, 2011
Rating:

No comments:
Post a Comment