அண்மைய செய்திகள்

recent
-

திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு மன்னாரில் மக்கள் அச்சத்தில்


மன்னாரில் நீண்டகால இடைவெளிக்குப்பின் மீண்டும் திருடர்களின் கைவரிசை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்க ப்படுகின்றது.நாட்டில் அவ்வப்போது ஏதோ ஒருவிதமான புதிய வகை சலசலப்பு ஏற்பட்டுக் கொண்டிருப்பது போன்று தற்போது மன்னாரில் திருடர்களின் கை வரிசை மேலோங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
கடந்த சில மாதங்களுக்கு முன் கிறீஸ் பூதம் எனும் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தால் மக்கள் ஒருவித அச்சுறுத்தல் நிலைக்குள் முடங்கி இருந்தனர்.இந்த நிலையில் கிறீஸ் மனிதர்கள் பற்றிய அச்சம் மறையத் தொடங்கி உள்ள சூழலில்  தற்போது மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் திருடர்ககளின் நடமாட்டம் அதிகரித்திருப்ப தாகவும், இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் இவர்கள் தமது கைவரிசையினைக் காட்டி வருவதாகவும் மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
 
கொள்ளையிடுவதற்காக வருபவர்கள் தமது கைகளில்  சிறிய ரக ஆயுதங்களை எடுத்து வருவதாகவும், கொள்ளையர் களை மக்கள் துரத்திச்செல்லும் போது இத்தகைய ஆயுதங்க ளால் அவர்கள் தாக்கப்படு வதாகவும் தெரியவருகின்றது.  தற்போது மன்னாரில் பெருகியுள்ள கொள்ளைச் சம்பவங்களின் காரணமாக நகர மக்கள் இரவில் தூக்கம் இன்றி விழித்திருக்க வேண்டிய நிலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
தற்போது பண்டிகைக் காலம் என்பதால் மன்னார் நகரம் வழமையைக்காட்டிலும் சுறுசுறுப்பாக காணப்படுகிறது. நத்தார், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை ஒட்டி அங்காடி வியாபாரிகள் நகரம் முழுவதும் கடைகளை அமைத் திருக்கின்றனர்.இந்தக் கடைகளில் பொருள் களைக் கொள்வனவு செய்வ தற்காக இரவு நேரங்களில் மன்னார் நகரில் சனக்கூட்டம் அலைமோதுகிறது. 
 
இதனைக் தமக்குச் சதகமாகப் பயன்படுத்தும் கொள்ளையர்க ள் ஆள்களற்ற வீடுகளில் இரவு நேரங்களில் வீட்டின் ஓடு களை கழற்றி உள்நுழைந்து கையில் அகப்பட்டதை _ருட் டிக்கொண்டு தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.மன்னார் நகரில் பொலி ஸாரும், அவர்களின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டிருந்த விழிப்புக்குழுக்களும் இருக் கும்போது தொடர்ந்தும் கொள் ளையர்கள் தம் கைவரி சையைக் காட்டுவது எப்படி என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு மன்னாரில் மக்கள் அச்சத்தில் Reviewed by NEWMANNAR on December 27, 2011 Rating: 5

1 comment:

Hashiny said...

Its true, Plz take action immediately

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.