விசப்பாம்புகளுக்கு நடுவில் வாழ்ந்து வரும் எமக்கு எப்போது விடிவு கிடைக்கும்.சன்னார் கிராம மக்கள்.
விசப்பாம்புகளுக்கு நடுவில் வாழ்ந்து வரும் எமக்கு எப்போது விடிவு கிடைக்கும்.சன்னார் கிராம மக்கள்.
வன்னி யுத்தத்தின் பின் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம மக்கள் தற்போது விசப்பாம்புகளுடன் வாழ்ந்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் சன்னார் கிராம மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,,,,
யுத்த்தின் பின் மீண்டும் சன்னார் கிராமத்தில் நாங்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டேம்.தற்போது 145 குடும்பங்களைச் சேர்ந்த 850 பேர் குறித்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம்.
எமது வீடுகளைச் சுற்றி அடர்ந்த காடுகள் காணப்படுகின்றது. நாங்கள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியிலே வாழ்ந்து வருகின்றோம்
தற்போது மழை பெய்து வருகின்றது.
இதனால் காடுகளுக்குள் உள்ள பாம்புகளும் விசப்பூச்சிகளும் எமது குடிசைகளை நோக்கி படை எடுக்கத் தொடங்கியுள்ளது.
எமது வீடுகள் ஓலைக்குடிசைகலாகவே காணப்படுகின்றது.
எமது கிராமத்தில் அதிக சிறுவர்கள் காணப்படுகின்றனர்.
அண்மையில் படுத்த படுக்கையில் வைத்து விசப்பாம்பு தீண்டி 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எமது வீடுகள் ஓலைக்குடிசைகலாகவே காணப்படுகின்றது.
எமது கிராமத்தில் அதிக சிறுவர்கள் காணப்படுகின்றனர்.
அண்மையில் படுத்த படுக்கையில் வைத்து விசப்பாம்பு தீண்டி 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடரும் என்ற அச்சத்தில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
இரவு நேரத்தில் நித்திரை கொள்ள முடியாத நிலையில் உள்லோம்.இரவாகியவுடன் அச்சத்தில் இருக்கின்றோம்.
இரவு நேரத்தில் நித்திரை கொள்ள முடியாத நிலையில் உள்லோம்.இரவாகியவுடன் அச்சத்தில் இருக்கின்றோம்.
வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை.நாம் தொடர்ந்தும் முடக்கி வைக்கப்பட்ட அகதிகலாக வாழ்ந்து வருகின்றோம்.
எமக்குப்பிறகு மீள் குடியேற்றப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சகல விதமான மீள் குடியேற்ற உதவிகளையும் செய்துள்ளது.ஆனால் நாங்கள் வாழ்ந்த இடத்தில் மீண்டும் மீள் குடியேறியுள்ள போதும் எமக்கு எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை.
எமக்கு வரும் உதவிகளை இங்குள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்,அரசாங்க அதிபர்,சன்னார் கிரம அலுவலர் ஆகியோர் மனம் வைத்தால் எமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்,அரசாங்க அதிபர்,சன்னார் கிரம அலுவலர் ஆகியோர் மனம் வைத்தால் எமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
விசப்பாம்புகளுக்கு நடுவில் வாழ்ந்து வரும் எமக்கு எப்போது விடிவு கிடைக்கும்.சன்னார் கிராம மக்கள்.
Reviewed by Admin
on
December 30, 2011
Rating:

No comments:
Post a Comment