கிராமத்தையும் வீடுகளையும் பிரிந்து நாம் செல்ல முடியாது

தங்களைத் தமது சொந்தக் கிராமத்திலிருந்து வெளியேற்ற அரச அதிகாரிகள் தொடடிர்ந்து வற்புறுத்தி வருவதாகவும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர். சன்னார் கிராமத்தில் 154 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 850 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மக்கள் கடந்த வன்னி யுத்தத்தின் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்கள். யுத்தத்தின் போது உறவுகளை இழந்துள்ளனர். பலர் எவரும் இன்றித் தனி மனிதனாக உள்ளனர். சில பெற்றோர் தமது பிள்ளைகளையும், சில பிள்ளைகள் தமது பெற்றோரையும் யுத்தத்தில் பலி கொடுத்துள்ளனர்.
இவர்களுடைய மனதில் இழப்புக்கள் தொடர்பான சோகங்கள் காணப்படுகின்றன. தமது நிலை தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:
தற்போது நாங்கள் மீள் குடியமர்வு செய்யப்பட்டுள்ள போதிலும் எமது கிராமத்துக்கெனப் பொது மலசலகூடம் ஒன்று கூட இல்லை. உரிய போக்குவரத்து வசதிகள் இல்லை. குடிதண்ணீர் போதிய அளவு இல்லை இவ்வாறு பிரச்சினைகளுக்கு நாங்கள் நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் தற்போது எமது முயற்சியில் உருவாக்கப்பட்ட எமது கிராமம் மற்றும் எமது வீடுகளை விட்டு அதிகாரிகள் கூறுவது போன்று நாங்கள் எப்படிச் செல்ல முடியும் என அம்மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வத்திடம் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தையும் வீடுகளையும் பிரிந்து நாம் செல்ல முடியாது
Reviewed by Admin
on
January 04, 2012
Rating:

No comments:
Post a Comment