அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபை பண்டிகைக்கால கடைகளிலிருந்து வரிப்பணம் அறவீடு

 நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக்காலங்களின் போது மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வியாபார நிலையங்களின் மூலம் மன்னார் நகரசபை 11 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவை வரிப்பணமாக அறவீடு செய்துள்ளதாக மன்னார் நகரசபையின் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.


மன்னார் நகரசபை கைப்பற்றப்பட் பின்னர் மன்னார் நகரசபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தினதும் மக்களினதும் வேண்டுகோளுக்கமைய மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 12 அடி நீளமுடைய 135 தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

பின்னர் அவ்விடத்தில் மேற்கொள்ளப்படும் வியாபக்ரத்திற்கமைய நில வாடகையாக 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை மன்னார் நகரசபையால் அறவிடப்பட்டது. இருப்பினும் வியாபாரிகளின் நலன் கருதி நாளாந்த வாடகை எதுவும் அறவீடு செய்யப்படவில்லையெனவும் அவர் கூறினார்.

நில வாடகையாக மட்டும் 11 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இரட்னசிங்கம் குமரேஸ் குறிப்பிட்டார்.

இப்பணம் மன்னார் நகரசபையின் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

(எஸ்.ஜெனி)
மன்னார் நகரசபை பண்டிகைக்கால கடைகளிலிருந்து வரிப்பணம் அறவீடு Reviewed by Admin on January 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.