காணாமல் போனோர், தடுப்புக்காவலில் உள்ளோர் விபரங்களைப் பதிவு செய்ய த.தே.கூட்டமைப்பு நடவடிக்கை

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோர் விபரங்களை அறிவதற்குப் பலவழிகளிலும் முயன்றும் அவை கிடைக்கப்பெறாமையால், தற்பொழுது மக்களிடமிருந்தே நேரடியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி, மேற்படி விபரத்தினை உரிய ஆவணங்களுடன் நேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் காரியாலயத்தில் பதிவு செய்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதன்போது, பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், பாலினம், கடத்தப்பட்ட அல்லது காணாமல் போன திகதி, இடம், முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பின் அதன் விபரங்கள், தடுப்புக் காவலில் இருந்தால் வைக்கப்பட்டுள்ள இடம், தகவல் தருவோரின் உறவுமுறை, தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கம், தகவலளிப்போரின் கடிதத்துடன் காணாமல் போனோரின் புகைப்படம் இருந்தால் அதனையும் கையளிக்கலாம்.
இதேவேளை, 024-2221898 எனும் தொலைபேசி இலக்கத்துடன் வவுனியாவில் உள்ள எமது அலுவலகத்துடன் தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
காணாமல் போனோர், தடுப்புக்காவலில் உள்ளோர் விபரங்களைப் பதிவு செய்ய த.தே.கூட்டமைப்பு நடவடிக்கை
Reviewed by Admin
on
January 06, 2012
Rating:

No comments:
Post a Comment