விடத்தல்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
மன்னார் விடத்தல் தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
உந்துருளி ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தின் போது படுகாயமடைந்த இருவரும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜேசப் அகஸ்ரின் றீகன் (வயது-30)இஅந்தோனிப்பிள்ளை றொமைஸ் றொமி(வயது-30)என தெரியவந்துள்ளது.
அந்தோனிப்பிள்ளை றொமைஸ் றொமி என்பவருக்கு எதிர்வரும் வாரம் திருமணம் நடைபெறவிருப்பதனால் குறித்த இரண்டு போரும் யாழ்ப்பாணத்திற்கு சென்று உறவினர்களுக்கு அழைப்பிதல்களை கொடுத்து விட்டு மீண்டும் மன்னார் திரும்பும் போதே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களது உடலங்கள் மன்னார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
January 30, 2012
Rating:

No comments:
Post a Comment