மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்
மன்னார் மாவட்டம் ஒரு பல்லின வளங்களைக்கொண்ட மாவட்டமாக திகழ்கின்றது.இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய முன் உரிமை வழங்கப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு,பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சு,இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சு அரச வளங்கள் மற்றும் தொழில் விருத்தி அமைச்சு,ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு,பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு,மன்னார் மாவட்ட செயலகம்,இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகிய நிறுவனங்களின் அமுலாக்கலில் கடந்த சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை வளாகத்தில் 'திரிநெகும' வாழ்வு எழுச்சி 25 இலட்சம் மனைப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்ட கண் காட்சி இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ மக்கள் முன் உரையாற்றும் போதே மேற் கண்டவாறு கூறினார் அவர் மேலும் உரையாற்றுகையில் ஆசிய கண்டத்திலே எமது நாடு சிறந்த நாடாக திகழ வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். .ஏன் என்றால் நாடு வளம் பெற வேண்டுமானால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் சிறந்து விளங்க வேண்டும் இது தான் அவரில் குறிக்கோள் .
இதை மையமாக கொண்டு அவரின் திவி நெகும வாழ்வு எழிச்சித்திட்டம் அமுழ் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் விட்டிலும் குடிசை கைத்தொழில்கள் விட்டுத்தோட்டம்,கால்நடை வளர்ப்பு உருவாக்கப்பட்டு அவர்கள் தமக்குத்தேவையான சுத்தமான உப உணவுப்பொருட்களை தாமே உற்பத்தி செய்து தமது நோயற்ற வாழ்விற்கு உணவுப்போருத்களைபெற வாய்ப்பு அழிக்கப்படுகிறது .இதற்காகத்தான் இவ்வாறன கண்காட்சிகள் நடாத்தப்பட்டு ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான கைத்தொழிலை தெரிவு செய்து அதற்கான பயிற்சியும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் .மேலும் தெரிவு செய்யும் கைத்தொழிலுக்கு தேவையான பயிற்சியுடன் இத் தொழிலுக்குத் தேவையான மானிய கடன் உதவியும் அரசு அதிபர் ,வங்கியின் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .மன்னார் மாவட்டம் சகல வசதிகளையும் கொண்ட மாவட்டம் இதை அபிவிருத்தி செய்ய வேண்டுமென அமைச்சர் ஒருவர் கொடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் .ஆகவே இது பாரிய அபிவிருத்தியில் முன் எடுத்துச் செல்லப்படுகின்றது .
அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி வன்னி மாவட்டம் பாரிய அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படுகிறது .ஆகவே அடுத்து வரும் வருடத்தில் அபிவிருத்தி காணும் என்பது திண்ணம் .
மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்
Reviewed by Admin
on
January 31, 2012
Rating:

No comments:
Post a Comment