மன்னார் தினச்சந்தையை வாராந்த சந்தையாக மாற்ற நடவடிக்கை
மன்னார் நகரப் பகுதியில் இயங்கிவரும் தினச்சந்தையை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் வாராந்த சந்தையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மன்னார் நகரசபை மேற்கொண்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையினருக்கும் மன்னார் வர்த்தக சங்கத்தினருக்கும் இடையில் மன்னார் நகர சபையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பிலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இச்சந்தை வாராந்த சந்தையாக இருந்தது. கடந்தகால யுத்த சூழ்நிலை
காரணமாக இது தினச்சந்தையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது இயங்கிவரும் இத்தினச்சந்தையை வாராந்த சந்தையாக மாற்றுமாறு மன்னார் வர்த்தக சங்கத்தினர், மன்னார் நகர சபையிடம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபை இது தொடர்பில் தினச்சந்தை வியாபக்ரிகளுடன் கதைத்து இச்சந்தையில் இருந்து எழும்புமாறு கோரி கால அவகாசம் வழங்கியிருந்தனர். இருப்பினும் இச்சந்தையை விட்டு வியாபாரிகள் வெளியேறவில்லை.
இந்த நிலையில் மன்னார் வர்த்தக சங்கத்தினருக்கும் மன்னார் நகர சபையினருக்கும் இடையில் நடத்தப்பட்ட இச்சந்திப்பின்போது
வர்த்தக சங்கத்தினரும் மன்னார் நகர சபை உறுப்பினர்களும் இணைந்து இறுதித் தீர்மானம் ஒன்றிற்கு வந்தனர். நேற்று வியாழக்கிழமையில் இருந்து எதிர்வரும் 16ஆம் திகதிக்கு இடையிலான 14 தினங்களுக்குள் இச்சந்தையிலுள்ள வியாபாரிகள் சந்தையை விட்டு வெளியேற வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
எதிர்வரும் தினங்களில் இச்சந்தை வாராந்த சந்தையாக மாற்றி சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் வியாபாரம் செய்ய வர்த்தகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உபதலைவர் ஜேம்ஸ் யேசுதாஸ், நகர சபை செயலாளர் குரூஸ், நகர சபையின் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள், மன்னார் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் என பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மன்னார் தினச்சந்தையை வாராந்த சந்தையாக மாற்ற நடவடிக்கை
Reviewed by Admin
on
February 03, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment