பிரதேச சபை உபதலைவர் வீட்டின் மீது தாக்குதல் -புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரைக் கைது
மன்னார் பிரதேச சபையின் உபதலைவரின் வீட்டினுள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை புகுந்த சிலர் நடத்திய தாக்குதலில், அவரது மனைவியும் கடைசி மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
பேசாலைக்கு சமீபமாக சின்னகரிசல் பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை உப தலைவரான
அந்தோனி சகாயத்தின் வீட்டினுள், வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இரும்புக் கம்பிகள், பொல்லுகள் சகிதம் புகுந்த இருவர் உப தலைவரைத் தேடியுள்ளனர்.
அவர் வீட்டில் இல்லாததால் அவரது மனைவி அன்னம்மா (49 வயது) மற்றும் கடைசி மகன் திலீபனை (22 வயது) கடுமையாகத் தாக்கி காயப்படுத்தி விட்டு அவர்களிருவரும் தப்பிச் சென்று விட்டனர்.
காயமடைந்த இருவரும் பின்னர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் நேற்றுக் காலை சந்தேகத்தின் பேரில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அந்தோனி சகாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினராவார்.
பேசாலைக்கு சமீபமாக சின்னகரிசல் பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை உப தலைவரான
அந்தோனி சகாயத்தின் வீட்டினுள், வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இரும்புக் கம்பிகள், பொல்லுகள் சகிதம் புகுந்த இருவர் உப தலைவரைத் தேடியுள்ளனர்.
அவர் வீட்டில் இல்லாததால் அவரது மனைவி அன்னம்மா (49 வயது) மற்றும் கடைசி மகன் திலீபனை (22 வயது) கடுமையாகத் தாக்கி காயப்படுத்தி விட்டு அவர்களிருவரும் தப்பிச் சென்று விட்டனர்.
காயமடைந்த இருவரும் பின்னர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் நேற்றுக் காலை சந்தேகத்தின் பேரில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அந்தோனி சகாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினராவார்.
பிரதேச சபை உபதலைவர் வீட்டின் மீது தாக்குதல் -புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரைக் கைது
Reviewed by Admin
on
February 12, 2012
Rating:

No comments:
Post a Comment