மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு தொடர்ந்து மானிய உரம் வழங்கவும்
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த உரம் குறைக்கப்பட்டுள்ளமையினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே குறித்த பிரச்சினையை உடன் நிவர்த்தி செய்யுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நெற்செய்கைக்கு 50 கிலோ கிராம் வீதம் 3 பாகங்களாக பிரித்து 150 கிலோ கிராம் உரம் 1 ஏக்கருக்கு மானியமாக வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது 1 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கு 2 பாகங்களுக்கு மட்டும் 100 கிலோ உரம் மானியமாக வழங்கப்படுகின்றது.
இதனால் 3 ஆவது தடவைக்கு உரம் இல்லாமையினால் அதிகலவான பணத்தை கொடுத்தே குறித்த உரத்தினை விவசாயிகள் வெளியில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளும் அதிக விலை கொடுத்து உரத்தினை பொற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே விவசாயிகளின் நலனில் அக்கரை செலுத்தி அவர்களுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் உரத்தினை தொடர்ந்து வழங்கவேண்டுமென அக்கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு தொடர்ந்து மானிய உரம் வழங்கவும்
Reviewed by Admin
on
February 12, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment