மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தரமாறு பொதுமக்கள் கோரிக்கை
மன்னார் நகர சபையின் கண்காணிப்பில் அமைந்துள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானம் சீரற்ற முறையில் காணப்படுவதாகவும் இதனால் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் மைதானம் முழுதும் நீர் நிறைந்து விடுகின்றது. இதேவேளை, மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம் உரியமுறையில் பராமரிக்கப்படுவதில்லை. குடி நீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மைதானத்திற்கு விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுப்படுவதற்காக வரும் விளையாட்டு வீரர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே இதுத் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மைதானத்தினை புனரமைத்துத்தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தரமாறு பொதுமக்கள் கோரிக்கை
Reviewed by Admin
on
February 03, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment