அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் குடிசன மதிப்பீடு தொடர்பாக விழிப்பூட்டும் ஊர்வலம்


மன்னார் மாவட்டத்தில் 14 பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்தியக்குழுவினர் கலந்து கொண்ட குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு தொடர்பாக விழிப்பூட்டும் ஊர்வலம் இன்று புதன்கிழமை காலை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை மாவட்ட உதவி தொகை மதிப்பு அத்தியட்சகர் எம்.வித்தியாநந்த நேசன் தலைமையில் இந்த விழிப்பூட்டும் ஊர்வலம் இடம்பெற்றது.

குறித்த ஊர்வலத்தின் போது 14 பாடசாலைகளின் பேன்ட் வாத்தியக்குழுவினரின் பான்ட் இசை முழங்க ஊர்வலமாக சென்றனர். இதன்போது குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு பணி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் பதிவுகளை மேற்கொள்ளுவது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.
500 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மோகநாதன்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பணியாளர்கள், கிராம அலுவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பவனியில் கலந்து கொண்டனர்.
மன்னாரில் குடிசன மதிப்பீடு தொடர்பாக விழிப்பூட்டும் ஊர்வலம் Reviewed by Admin on February 29, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.