அண்மைய செய்திகள்

recent
-

பிட்டு கேட்ட கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி!

 காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை, மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று (15) மட்டக்களப்பு வாகனேரியில் பதிவாகியுள்ளது. 


வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உயிரிழந்தவர் வழமைபோல விவசாய நடவடிக்கைகளுக்காக நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி, இன்று காலையில் வீடு திரும்பியுள்ளார். 

இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார். 

அதன்பின்னர் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

அது மோதலாக மாறிய நிலையில், முற்பகல் 11.30 மணியளவில் மனைவி, பிட்டு கேட்ட கணவனை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார். 

இதையடுத்து குறித்த பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த நிலையில், அங்கு கணவனை தாம் கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் வழங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு உடனடியாக தடயவியல் பிரிவு பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.




பிட்டு கேட்ட கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி! Reviewed by Vijithan on December 16, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.