அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றத்தினுள் கையடக்க தொலைபேசி ஒலித்தமையினால் அபராதம்

மன்னார் நீதிமன்ற அமர்வின் போது கைத்தொலைபேசி ஒலித்ததையடுத்து குறித்த தொலைபேசியின் உரிமையாளருக்கு 1,000 ரூபா அபராதம் செலுத்துமாறு மன்னார் மாவட்ட நீதவான் கே.ஜீவரானி இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மன்னார் மாவட்ட நீதவான் கே.ஜீவரானி முன்னிலையில் இன்று வியாழக்கிழமை வழக்கு விசாரனைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது, மற்றுமொரு வழக்கிற்காக வந்திருந்தவரி;ஒருவரின் கைத்தொலைபேசி ஒலி எழுப்பியுள்ளது.


இதனையடுத்து நீதிமன்ற கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் குறித்த நபர் கைத்தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் மீது நீதிமன்றத்தை அவமதித்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினார் ஆகிய குற்றச்சாட்டுக்கள் காரணமாக மன்னார் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த குற்றத்திற்காக 1,000 ரூபா அபராதமாக செலுத்துமாறும் குறித்த கையடக்கதொலைபேசியினை அரச உடமையாக்குமாறும் மாவட்ட நீதவான் உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றத்தினுள் கையடக்க தொலைபேசி ஒலித்தமையினால் அபராதம் Reviewed by Admin on March 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.