அண்மைய செய்திகள்

recent
-

அடிப்படை வசதிகளற்ற நிலையில் மடுக்கரை கிழக்கு கிராமம்

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிழக்கு 150 வீட்டுத்திட்ட கிராமம் இதுவரை எவ்வித அபிவிருத்தியும் காணாத நிலையில் உள்ளதாக மடுக்கரை கிழக்கு மாதர் சங்கத்தலைவி எஸ்.ஜெசிந்தா குரூஸ் தெரிவித்தார்.

மடுக்கரை கிழக்கு 150 வீட்டுத்திட்டத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வருடம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய அழிவுகளை குறித்த கிராமம் சந்தித்துள்ளது.


குறித்த வெள்ளப்பெருக்கின் காரணமாக குடி நீர் கிணறுகள் பாதீப்படைந்துள்ளன. தமது கிராமத்தில் தற்போது பல்வேறுபட்ட தேவைகளும், பிரச்சினைகளும் காணப்படுகின்றன.

எமது கிராமத்தில் குடி நீரை பெற்றுக்கொள்ள நாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். கிணற்று நீரை குடிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றோம்.

எமது கிராமத்தில் மின்சாரம் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அப்பகுதிகளில் அடர்ந்த காடுகள் காணப்படுவதினால் யானை மற்றும் பன்றி போன்றவற்றின் தாக்குதல்களுக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி வீதிகள் பல மிகவும் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது. போக்குவரத்து சேவைகளும் உரிய முறையில் இடம்பெறுவதில்லை. இக்கிராமத்தில் அதிகலவான பாடசாலை மாணவர்கள் உள்ள போதும் அவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதீக்கப்பட்டு வருகின்றது.

எமது கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு வந்த போதும் இதுவரை எமது கிராமத்திற்கு எவ்வித வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என மடுக்கரை கிழக்கு மாதர் சங்கத் தலைவி எஸ்.ஜெசிந்தா குரூஸ் மேலும் தெரிவித்தார்.
அடிப்படை வசதிகளற்ற நிலையில் மடுக்கரை கிழக்கு கிராமம் Reviewed by Admin on March 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.