மன்னாரில் தொழில் அபிவிருத்தி பயிற்சி
மன்னாரில் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தொழில் அபிவிருத்தி தொடர்பான பயிற்சி வகுப்புக்கள் இடம்பெறுகின்றது.
அதிகார சபையின் 'கிராமத்திற்கு உகந்த தொழில் முயற்சி' எனும் திட்டத்தின் கீழ் மன்னாரில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சுமார் 30 பயனாளிகளுக்கு இத்தொழில் பயிற்சி வழங்கப்படுகின்றது.
மன்னாரில் அமைந்திருக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வடமாகாண அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதித் தலைவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.எம்.அமீன் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
முதற்கட்டமாக மாந்தை மேற்கு, மடு மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது பயனாளிகளுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.அமீன் தெரிவித்திருக்கின்றார்.
மன்னாரில் இரு தினங்கள் இடம்பெறும் பயிற்சி வகுப்புக்களை அதிகார சபையின் தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ம.கண்ணதாசன் மன்னார் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதம நிரைவேற்று உத்தியோகத்தர் றெஜினோல்ட் மார்க் ஆகியோர் நெறிப்படுத்தியிருக்கின்றனர்

Reviewed by Admin
on
March 18, 2012
Rating:

No comments:
Post a Comment