அண்மைய செய்திகள்

recent
-

அன்னையர் தின சிறப்புக்கட்டுரை.

ஒவ்வொரு ஆண்டும்  உலகின் பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தின நன் நாளில் நாம் நம் தாயின், தாய்மையின் பெருமையை அறிவது அவசியமானதாகும்.

தாய்: தாய் தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம்.அவள் இல்லை என்றால் நாம் இந்த உலகில் பிறந்திருக்கமுடியாதோ,அவளை நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாதோ அவளே தாய். அவளே நம் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் ஆரம்பித்து வைக்கிறாள். தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து தான் அனைத்தம் உருவாகின்றது.
தாய் – தாய் தான் ஜனனத்தை தோற்றுவிக்கிறாள்.
தாய் – தந்தை, குரு, கடவுள் மற்றும் உறவுகளை அறிமுகப்படுத்துபவள்.
தாய் – எந்த ஒரு தவறான செயலிலும் தடைவிதிப்பவள்.
தாய் – மழலைப் பருவத்தில் பேசும் முதல் வார்த்தை ‘அம்மா’.
தாய் – உள்ளுணர்வால் உந்தப் பெற்ற தத்துஞானி.
தாய் – ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பத்தின் போதும் நமக்காக முதலில் கண்ணீர் சிந்துபவள்.
தாய் – தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள்.
தாய் – தனது கருவறையில் வைத்து பத்து மாதம் உணவு ஊட்டக் கூடியவள். தாய்மை. தனது பிரசவ வலியில் இருக்கும் போது கூட வயிறு வலிக்கிறது என்று கூறாமல் குழந்தை என்னை உதைக்கிறது என்று கூறக்கூடிய பெருந்தகையவள்.
தாய், தாய்மை பற்றி இலக்கியங்கள் கூறுவது:
தாய், தந்தை பேண் – (பேண் – விரும்பு. தாய், தந்தையைய் விரும்பு).
விண்ணுலகம் மண்ணுலகம் இரண்டும் பெண்ணுலகத்தாலேயே வாழ்கிறது. பெண் இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை என்கிறது.
தாய்நாடு – நாம் நம் நாட்டை ‘தாய்நாடு’ என்று தான் கூறுகிறோம்.
தாய்மொழி – நாம் பேசுகின்ற மொழியைய் கூட ‘தாய்மொழி’ என்று தான் கூறுகிறோம்.

‘மாத்துரு தேவோ பதே பித்தரு தேவோ பதே’ – அம்மாவை சொல்லிதான் அப்பாவை சொல்லனும். அம்மா காட்டித்தான் குழந்தைக்கு அப்பாவைத் தெரியும். குரு நமஹ. அப்பா குருவை காட்டிய பின்பு தான் குருவை அறிவோம். இங்கு சந்தேகத்திற்கு இடமில்லாதது தாய்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.
தந்தையை பார்க்கினும் தாய்க்கு பெருமை அதிகம்.
மகன் சந்நியாசி ஆனப்பிறகும் வணங்கத் தக்கவள் தாய்.

சிவத்துக்கு ஒரே இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி அன்று பட்டினி போடுவார்கள். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. தாய் ஒரு பொழுதும் தன் குழந்தையைய் பட்டினி போட மாட்டாள். ஆகையால் தான் நவராத்திரி அன்று இரவு பொங்கல், புளியோதரை என்ற சகல உணவுகளும் கோயில்களில் வழங்கப்படுகிறது.

காலிலே மிதிபடுகிற மண்ணை பூமாதேவி – இந்த பூமியைய் தாங்கக் கூடியவள் பெண்.

இன்று வரை மேற்கு வங்காள மாநிலத்தில் தாயைத் தட்டிலே நிறுத்தி அவளது காலை சுத்தம் செய்து ‘பாத பூஜை’ செய்கிறார்கள். அந்த கால் அலம்புகின்ற தண்ணீரை கங்காதேவி, ஆகாசவானி, கிரகலட்சுமி, தான்யலட்சுமி என்று கூறுகிறார்கள்.

திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது கூட நேராக யாரும் பெண்ணைப் பார்ப்பது கிடையாது. ‘தாயைய் பார்த்து பெண்ணெடு’ என்று தான் கூறுகிறார்கள். ஒரு தாய் எப்படி இருக்கிறாளோ அதை வைத்து தான் அவள் வளர்க்கிற அந்த பெண்ணை பார்க்கிறார்கள்.

தாய்மை பற்றி கண்ணதாசன் கூறுவது:
நான் என் தாயை வணங்குகிறேன். எனது வாழ்க்கைக்கு மனைவி ஒருத்தி துணையாக வந்து இருப்பாளேயானால் நான் வணங்குகின்ற என் தாயைய் அவளும் வணங்கி ஆக வேண்டும்.

என் தாய் என்பவள் என் குடும்பத்தின் இராணி. அந்த ராணிக்குத் தோழி தான் என் மனைவி. அந்த மனைவி என்பவள் இராணி என்கிற அந்தஸ்த்தை ஒரு போதும் பெற முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் இராணியாக இருக்கலாமே தவிர என் தாய்க்கு கிடையாது.
திருக்குறள் கூறுவது:
தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற
சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.

விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.

என்றும் நமக்காக எந்தவேளையிலும் நம் அக்களிப்பிலும் அகமகிழ்விலும் துன்பத்திலும் நோயிலும் நம்முடன் கூடவே நம்மைத் தாங்கி வருபவள் இவ்வுலகில் நம்முடன் இல்லாவிடினும் கூட அதாவது நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாலும் கூட மானசீகமாக நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவள் நம் அன்னை மட்டுமே.

அன்னையர் தம் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி தம் குழந்தைகளை நல்வழியில் இட்டுச் செல்லக்கூடிய ஆன்ம உடல் வலிமைகள் அவர்களுக்கு கிடைக்க இந்நாளில் பிரார்த்திப்போமாக


இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

அன்னையர் தின சிறப்புக்கட்டுரை. Reviewed by Admin on March 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.