இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் அனுசரணையில் இடம்பெயர் மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பான அவசரக் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, இடம்பெயர்ந்த நிலையில் வேறு கிராமங்களில் குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே ஆராயப்பட்டன. குடிநீர் மற்றும் மலசலகூடப் பிரச்சினை, வீதி மற்றும் போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுனேஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எம்.எம்.ஆலம், மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் எஸ்.டிலான், மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் நிர்வாக அலுவலகர் தர்மரட்னம் அஞ்சலி, பாதிக்கப்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Reviewed by Admin
on
March 27, 2012
Rating:

No comments:
Post a Comment