தரவன்கோட்டை கிராமத்தில் புதிதாக பாடசாலை அமைக்க வேண்டுகோள்
மன்னார் தரவன்கோட்டை கிராமத்தில் நிரந்தரமாக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராமத்தில் உள்ள மாதர் அபிவிருத்திச்சங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக்கிடம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் கிராம அலுவலகர் பிரிவில் தரவன்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் இவர்கள் சுமார் 3.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மன்னார் நகர் பாடசாலைகளுக்கு சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர்.
தரவன்கோட்டை கிராமத்தில் உள்ள மக்கள் சுயதொழில் உற்பத்திகளின் மூலம் தமது வருமானத்தை தேடிக்கொள்ளுக்கின்றனர். இக்கிராமத்திற்கு உரிய நேரத்தில் அரச, தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதும் இல்லை. இதன் காரணமாக தமது பிள்ளைகளை தனியார் வாகனங்களில் அதிக பணம் செலுத்தி பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கஷ்ட நிலையில் உள்ள இம்மக்கள் மாதாந்தம் போக்குவரத்துச் செலவுகளுக்காக பல ஆயிரம் ரூபாய் பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, முதற்கட்டமாக இக்கிராமத்தில் தரம் 01 முதல் 5 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலை ஒன்றை உடன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Reviewed by Admin
on
March 07, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment