மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்...(மன்னார் இணையத்தின் சிறப்பு செய்தி காணொளி இணைப்பு
இந்த மக்கள் தொடர்பாக வன்னி பா.உ செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்ட பொழுதுதான் மக்களை சந்தித்து மேலதிக தகவல்களை தருவதாகவும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும்தெரிவித்துள்ளார்
---------------
---------------
அன்பான வணக்கம் நியூ மன்னார்.கொம் ஆசிரியர் அவர்களுக்கு.....
நான் மன்னார் மாவட்டம் மன்னார் பிரதோச சபைக்குள் அடங்கும் நாகதாழ்வு என்னும் கிராமத்தை வசிப்பிடமக கொண்டவன். நாங்கள் 2010ஆண்டு மீள்குடியேற்றப்பட்டோம். எந்தவொரு அடிப்டை வசதிகளும் அற்று 2010ஆண்டு முதல் வாழ்ந்து வருகின்றோம்.மலசலகூடம் இன்றி பெண்கள் சிறுவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். காடுகளுக்குள்ளே தமது கடமைகளை முடிக்கின்றனர். அவ்வப்போது விசப்பாம்புகளையும் எதிர்கோள்ளுகின்றோம். மற்றும் மின்சார வசதி இல்லாமை...கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது எமது ஊருக்கு வாக்கு கேட்டு வந்தவர்கள் அனைவரும் மின்சாரம்,மலசலகூட வசதிகள் உடனடியாக பெற்று தருவாக உறுதிமொழி வழங்கினர் ஆனால் உள்ளூராட்சி தேர்தல் முடிந்து ஒரு வருடமாகியும் எமது ஊர் பக்கம் எவரும் தலைகாட்டவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது. அன்பான ஆசிரியர் அவர்களே இந்த செய்தியை உங்கள் வெப்சைட்டில் பிரசுரிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
நாகதாழ்வு மக்கள்..
மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்...(மன்னார் இணையத்தின் சிறப்பு செய்தி காணொளி இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
April 29, 2012
Rating:

No comments:
Post a Comment