பேசாலையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.
பேசாலைப் பகுதியில் ஒருதொகுதி போதைப்பொருளை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததுடன், போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துசார தலுவத்த தெரிவித்தார்.
தமக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸாரும் கொழும்பிலிருந்து வந்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸாரும் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோகிராம் கஞ்சா, ஒரு கிலோகிராம் ஹெரோயின் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மன்னார் பொலிஸாரும் கொழும்பிலிருந்து வந்த போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸாரும் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோகிராம் கஞ்சா, ஒரு கிலோகிராம் ஹெரோயின் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேசாலையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது.
Reviewed by NEWMANNAR
on
April 26, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment