அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்ஆயர் குறித்து வெளியிட்ட கருத்தில் உறுதியாக உள்ளேன்-றிசாத் பதியுதீன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை குறித்து ஆராய மூவரடங்கிய சட்டத்தரணி குழுவொன்றை தாம் நியமித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில். வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.



கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட்,சிரேஸ்ட பிரதி தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தகவல் தருகையில் –ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த,நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனையினை எமது கட்சி எடுத்துரைத்துள்ளது. அதில் சில விடயங்கள் உள்ளீரக்கப்படவில்லை. அவற்றையும் சுட்டிக்காட்டி எமது ஆலோசனைகள் அடங்கிய எழுத்து மூலமான அறிக்கையினை கையளித்துள்ளோம். இதனை நடை முறைப்படுத்துவதன் மூலம் இடம் பெயர்ந்த மக்கள் பெரும் நன்மைகளை அடைவர்.

அதே வேளை வடக்கில் இருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதே போல் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் எவ்வித இனப் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்படுவதை நான் உறுதி செய்கின்றேன்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், -

நான் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்ட மதிப்புக்குரிய மன்னார் ஆயர் அவர்கள் பற்றிய கருத்துக்கு அங்கிருந்த தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிறீரங்கா எம்.பி ஆகியோர் எவ்வித கருத்தக்களையும் கூறவில்லை. ஏனெனில் என்னால் முன் வைக்கப்பட்ட கருத்தினை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் வெளியில் வந்ததன் பிறகு இந்த உரைக்கு புதிய வியாக்கியானத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரங்கா கூற முற்பட்டுள்ளார். அவரோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தேவையற்ற இனரீதியான கருத்துக்களை விதைக்க முற்படுகின்றனர்.

தமக்கான ஊடகங்கள் இருப்பதனால் எமக்கு எதிரான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கின்றனர். எமக்கான தனியான ஊடகங்கள் இல்லை என்பதால் இன்னும் எவ்வளவுக்கு சில தமிழ் ஊடகங்களை பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கு அதனை அவர்கள் செய்கின்றனர். மரியாதைக்குரிய மன்னார் ஆயர் குறித்து என்னால் சொல்லப்பட்ட உண்மையான ஆதாரபூர்வமான தகவல்களுக்காக மன்னிப்பு கோறுமாறு தமிழ் கூட்டமைப்பு அறிக்கைவிட்டு வருகின்றனர். நான் ஏன் மன்னிப்புக் கோர வேண்டும், மதிப்புக்குரிய ஆயர் அவர்களின் மதவிவகாரங்களிலோ அல்லது தனிப்பட்ட விடயங்கள் குறித்தோ நான் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்களில் தலையிட முற்பட்ட போது தான் நான் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினேன்.

பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து நியாயமானது, தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டில் இருந்தால் வத்திக்கானுக்கும், ஜெனீவாவுக்கும் சென்று உண்மையை சொல்ல தயங்க வேண்டியதில்லை. மன்னார் நானாட்டான் காணி விடயமாக நடவடிக்கையெடுத்த போது, அதற்கு எதிராக செயற்ப்பட்டதை அதிகாரிகள் மற்றும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதே போன்று சன்னார் காணிப் பிரச்சினையும் உருவெடுத்துள்ளது என்றும் அமைச்சர றிசாத் பதியுதின் தெரிவித்தார்.

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்று மற்றுமொரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு,அதற்கான அச்சத்தை யாரும் கொள்ளத் தேவையில்லை.அதே இடத்தில் தான் பள்ளிவாசல் இன்றும் இருக்கின்றது.எதிர்காலத்திலும் அதே இடத்தில் தான் இருக்கும் என்ற உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கிழக்கு மாகாண சபை தேர்தல்
இது குறித்து அமைச்சர் கூறுகையில் -கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.அதற்காக ஏனையவர்களை பகைக்க வேண்டிய தேவையில்லை.தேசிய காங்கிரஸூடன் நாம் பேச்சுக்களை நடத்திவருகின்றோம்.கடந்த தேர்தலில் எமது கட்சி எடுத்த முயற்சியால் தான் கிழக்கில் ஆட்சியை பெற்றுக் கொள்ள முடிந்தது என்றும் அமைச்சர றிசாத் பதியுதீன் இந்த செய்தியாளர் மாநாட்டில் கூறினார்
மன்னார்ஆயர் குறித்து வெளியிட்ட கருத்தில் உறுதியாக உள்ளேன்-றிசாத் பதியுதீன் Reviewed by Admin on May 25, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.