அண்மைய செய்திகள்

recent
-

பெரிய கடையைச்சேர்ந்த வயோதிப தாய் பிரதான பாலத்தடி கடற்கரையில் சடலமாக மீட்பு


மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற் படையினரின் காவலரனுக்கு முன்னாள் வபோதிப தாயின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.




குறித்த வயோதிப தாய் மன்னார் பெரிய கடையைச் சேர்ந்த 76 வயதான செபமாலை றெசினா என அடையாளம் காணப்பட்டள்ளது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கடற் படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவரது மகன் குறித்த இடத்திற்கு வந்து சடலத்தை அடையாம் கண்டுள்ளார். சற்று மனநிலை பாதிப்புற்றுள்ள குறித்த வயோதிப தாய், மன்னார் உப்பள கடற்கரை வீதி ஊடாக வீட்டிற்கு வரும் போது கடலில் தவறி விழுந்திருக்கலாம் என அவரது மகன் தெரிவித்தார்.

இந்நிலையில் மன்னார் நீதவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரைணகளை மேற்கொண்ட போதே, குறித்த வாயோதிப தாயின் மகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும் குறித்த பெண்ணின் தலை பகுதியில் இரத்தக் காயம் காணப்பட்டுள்ளது.

சடலத்தை பார்வையிட்ட நீதவான் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையினை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
பெரிய கடையைச்சேர்ந்த வயோதிப தாய் பிரதான பாலத்தடி கடற்கரையில் சடலமாக மீட்பு Reviewed by Admin on May 25, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.