யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை முதலியார் கமம் கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சங்கரப்பிள்ளை வரதராஜா (வயது-45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை முதலியார் கமம் கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சங்கரப்பிள்ளை வரதராஜா (வயது-45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி நபர் கடந்த 22 ஆம் திகதி காலை தேன் சேகரிப்பதற்காக கல்லானி பாம் எனும் காட்டுப் பகுதிக்கு சென்று அன்றைய தினம் மாலை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இவரின் உறவினர்கள் மறுநாள் குறித்த காட்டுப்பகுதிக்குச் சென்று தேடியுள்ளனர்.
ஆனாலும், அன்றைய தினம் அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில் பொலிசாரின் உதவியுடன் குறித்த குடும்பஸ்தர் சடலமாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டார்.
இறந்தவரின் உடலில் பல இடங்களில் யானை தாக்கியதினால் ஏற்பட்ட காயங்கள் உள்ளதாக தெரிவித்த இலுப்பைக்கடவை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
Reviewed by Admin
on
May 28, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment