அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதிஸ்வர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்து ! - புத்தர் சிலை அகற்றப்படுமா ???

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் நேற்று வியாழக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச்செயலாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறித்த புத்தர் சிலை அகற்றப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது :



புத்தர் சிலை வைக்கப்பட்ட காணி இரு தனி நபருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அரசுத் தலைவரின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜய சிங்க திருக்கேதிஸ்வரத்திற்கு சென்று புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டிருந்தார்.

பின் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, புத்தர் சிலையினை வைத்ததாக கூறப்படும் இராணுவ அதிகாரி உள்ளிட்ட பலரை சந்தித்ததோடு குறித்த புத்தர் சிலை வைத்தமை தொடர்பில் ஆராய்ந்தார்.

இந்த நிலையில் தனியாருக்குச் சொந்தமான காணியில் எவ்விதமான அனுமதியும் இன்றி இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை தெரிய வந்த நிலையில் அதன் அனுமதியை உடன இரத்துச் செய்யுமாறு ரஜீவ விஜய சிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவளை ரஜீவ விஜய சிங்க உள்ளிட்ட குழுவினர் திருக்கேதிஸ்வரத்திற்கு செல்வது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மன்னார் பிரதேச ஊடகவியலாளர்கள் இருவருடன் திருக்கேதிஸ்வரத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருந்த பகுதியில் வைத்து ரஜீவ விஜய சிங்க கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டுமிருந்தார்.
மன்னார் திருக்கேதிஸ்வர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்து ! - புத்தர் சிலை அகற்றப்படுமா ??? Reviewed by NEWMANNAR on May 05, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.