அமைச்சர் றிஸாட் பதியூதீனின் முகத்திரையை கிழிப்போம்: மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம்

இவ்விடயம் தொடர்பில் அவ் ஒன்றியம் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மன்னார் ஆயர் அவர்களுக்கு எதிராக அமைச்சர் றிஸாட் பதீயூதீன் கதைத்தமையினை கண்டித்தே குறித்த எதிர்ப்பு கவனஈர்ப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் மதத்தலைவர்கள் 5 பேர் மீது அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் கையேந்தி நிற்கும் பொலிஸ் அதிகாரிகள் வழக்கு தாக்கள் செய்து அருட்தந்தையர்களை நீதிமன்றம் வரை இலுத்துச் சென்றுள்ளது.
எனினும் நீதி மன்றம் மன்னார் செபஸ்ரியார் பேராலய வளாகத்தினுள் குறித்த நிகழ்வை நடாத்த அனுமதி வழங்கியுள்ளதோடு குறித்த நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்க மன்னார் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் றிஸாட் பதியூதீனின் கைக்கூலிகள் சில 'மன்னார் மாவட்ட இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்களின் அமைப்பு' என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.
அதில் மன்னார் ஆயர் இராயப்பு ஜேசப்பு ஆண்டகை அவர்களை மட்டுமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோருக்கு எதிராகவும் குறிப்பிடப்பட்டள்ளது.
நாளை நடைபெறவுள்ள கண்டன நிகழ்வை சீர்குலைக்கும் வகையிலே அமைச்சர் அவர்கள் திட்டம் தீட்டி குறித்த துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாம் முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக எந்த விதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. ஈடுபடவும் மாட்டோம்.ஆனால் மன்னார் ஆயர் அவர்களை இழிவுபடுத்தி தமிழ் அரச அதிகாரிகளையும், தமிழ் மக்களையும் தனது அமைச்சர் பதவி மூலம் அடிமைத்தனமாக வைத்துள்ள குறித்த அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் முகத்திரையை கிழிக்க அனைவரும் அணி திரள வேண்டும்.
நாளை காலை 10 மணிக்கு மன்னார், செபஸ்ரியார் பேரால முன்றலில் அனைத்து கத்தோலிக்க மக்களும் ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் றிஸாட் பதியூதீனின் முகத்திரையை கிழிப்போம்: மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம்
Reviewed by NEWMANNAR
on
May 26, 2012
Rating:

No comments:
Post a Comment