மன்னார் ஆயருக்கு ஆதாரவாகவும் அமைச்சர் ரிசாத்துக்கு எதிராகவும் அலையென திரண்ட மன்னார் மக்கள்.-படங்கள் இணைப்பு
.jpg)
குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோழிக்க மக்களுடன் இந்துக்களும் கலந்துகொண்டதோடு மதகுருமார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மத ஆரதானையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வின் போது, மன்னார் மறைமாவட்ட ஆயரை தம்புள்ளை புத்த பிக்குகளுடன் ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் கடுமையாக கதைத்தமையினை கண்டித்து பல்வேறு தரப்பினர்களுடைய கண்டன அறிக்கைகளும் வாசிக்கப்பட்டன.
'அமைச்சர் றிஸாட்டே உனது அரசியல் அராஜகம் ஒழிக எம் நிலங்களை அபகரிக்காதே, உன் முத்திரை கிழிக்கப்படும் உன் முகத்திரை அழிக்கப்படும், உன் சதி வேலைக்கு நாம் சாயமாட்டோம், உண்மையை உலகிற்கு உணர்த்துவோம், சர்வமத ஒற்றுமையை சாகடிக்க நினைக்காதே, றிஸாட்டே பேசக் கற்றுக்கொள், அமைதியின் ஆயருக்கு அவதூரு கொடுக்க நீ யார்?' போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மக்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக கண்டன தீர்மானம் வாசிக்கப்பட்டு மக்களினால் ஆதரவு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆயருக்கு ஆதாரவாகவும் அமைச்சர் ரிசாத்துக்கு எதிராகவும் அலையென திரண்ட மன்னார் மக்கள்.-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
May 27, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment