அண்மைய செய்திகள்

recent
-

தேவன் பிட்டியில் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்

தேவன்பிட்டியில் மக்கள் ஆர்பாட்டம். மன்னார் மாந்தை மேற்கு தேவன் பிட்டியில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு வெளியிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறீலங்காவின் கைத் தொழில் அபிவிருத்தி அமைச்சரின் இணைப்பாளர் ஒருவருக்கு எதிராகவே இவ்எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் தேவன் பிட்டி கடலோரமான பல்வேறு வளங்கள் உள்ள நிலையில்
அமைச்சரின் பின்னணியில் அவற்றை சுரண்ட முட்பட்ட மேற்படி இஸ்லாமிய முதலீட்டாளரை எதிர்த்தும் அவரது முதலீடுகள் தேவன்பிட்டிக்கு வரக்கூடாது எனத் தொவித்துனம் மக்கள் இவ் ஆhப்பாட்டத்தை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது.
தேவன் பிட்டி கடற்கரையில் பண்ணை அமைந்து கடல் உணவுகளை வளர்க்கமுற்பட்ட வேளை இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றதாகவும் மக்கள் கடும் எதிர்ப்பை அடுத்து திட்டதை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிற்து.
ஏற்கனவே முல்லைத்தீவு கொக்கிளாயில் உள்ள இல்மனைற் படிமங்கள் கொண்ட நிலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு சொந்மதானதாக இருந்தவற்றை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்கும் ஏற்பாடு நிகழ்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது புலம் பெயர் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு காரணங்களால் வர அஞ்சும் நிலையை சாதகமாக்கிக் கொண்டு அரச பின்புலத்துடன் தமிழ் மக்களின் நிலங்களின் வர்த்தக மற்றும் வளச் சுரண்டல்கள் திட்டமிடப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகு
தேவன் பிட்டியில் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம் Reviewed by NEWMANNAR on May 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.